துணிவு > வாரிசு ? அஜித்தின் துணிவு படம் எப்படி உள்ளது ? யார் பொங்கல் வின்னர்?

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் எப்படி பார்க்கப்படுகிறது. இந்த தொகுப்பில் காண்போம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு…

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் எப்படி பார்க்கப்படுகிறது. இந்த தொகுப்பில் காண்போம்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது.

நேற்றிரவு 9 மணி முதலே ரசிகர்களின் கூட்டம் திரையரங்கஙளில் அலைமோதிய நிலையில் துணிவு திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்பு காட்சிகள் தமிழகம் முழுவதும் நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இது குறித்து ரசிகர்கள் தெரிவித்திருப்பதாவது.

 

https://twitter.com/manikan47749168/status/1613095147906138115?s=20&t=CoGI1JfexK7nbREuX2WmcQ

மேலும், First Half தல ஆரவார எனர்ஜி ஆட்டம். செம்ம ஸ்பீடு. Second Half வினோத் டச். நல்ல மெசேஜ். பேமிலி ஆடியன்ஸ்க்கும் கனெக்ட் ஆகும். படம் முழுவதும் ஒவ்வொரு சீனுக்கும் ஜிப்ரான் பிஜிம் அசர வைக்குது. மொத்தத்துல நம்ம துணிவு இந்த பொங்கலுக்கு மாஸ் வின்னிங் என்டர்டெய்னர் எனவும் இணையத்தில் படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்ரனர். 

”மங்காத்தாவிற்குப் பிறகு மீண்டும் செம்ம கூலான, மாஸான அஜீத்தைப் பார்க்க முடிந்தது. ட்ரெண்டுக்கேத்த வசனங்கள், கடுப்படிக்காத காமெடிகள், அதிரடியான சண்டைக்காட்சிகள் என அதகளம் பண்ணிருக்காரு இயக்குனர் வினோத்” எனவும்,  ”துணிவு அஜித் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்” என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமனர்.

 

துணிவு பார்த்தாச்சு… மாஸாகவும் கருத்தாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறது படம். மக்களுக்கான போர்க்குரலாக அஜீத் சாரை முழங்க வைத்து, அதகளம் ஆடியிருக்கிறார் அ.வினோத். படக்குழுவினருக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்குமான வெற்றியாக கொடி நாட்டியிருக்கிறது துணிவு எனவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுதான் பொங்கல் பரிசு!, இதுதான் பிளாக்பஸ்டர்,  இதுதான் பொங்கல் பரிசு,  இதுதான் வெறியாட்டம், இதுதான் தல ஆட்டம், எதிர்பார்த்ததை போலவே இது துணிவு பொங்கல் என  ரசிகர் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.