இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

இலங்கை கிரிக்கெட் அணியில் யு-19 கேப்டனாக செயல்பட்ட முன்னாள் வீரர் தம்மிகா நிரோஷனாதனது வீட்டின் முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில்…

இலங்கை கிரிக்கெட் அணியில் யு-19 கேப்டனாக செயல்பட்ட முன்னாள் வீரர் தம்மிகா நிரோஷனாதனது வீட்டின் முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்ததை தொடர்ந்து, வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை இலங்கைக்கு எதிரான டி20 தொடர் தொடங்க இருக்கிறது.

இப்படி இருக்கையில் இலங்கையை சேர்ந்த முன்னாள் வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 2002ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியவர் தான் தம்மிக்க நிரோஷனா.

இன்னும் சொல்ல போனால் அவர் இலங்கை அணிக்கு கேப்டனாகவும் இருந்து வந்துள்ளார். இப்பொழுது அவருக்கு 40 வயதாகும் நிலையில் இலங்கையின் அம்பலாங்கொடை என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தம்மிக்க நிரோஷனா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் தம்மிக்க நிரோஷனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்னர் இவர் துபாயில் இருந்து வந்ததால், அங்கு அவருக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறது. மேலும் அவரின் இறப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.