விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ‘மினிக்கி மினிக்கி’ பாடல் வெளியானது!

பா.ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலரது…

பா.ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ளது தங்கலான்  திரைப்படம். கோலார் தங்க சுரங்க மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை மையமாக வைத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார் என ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தில் விக்ரம் கதாபாத்திரம் காண்போரை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது, பழங்குடியினரின் வாழ்வியல், அவர்களின் கலாச்சாரம் மற்றும் உடை என ஒட்டுமொத்தத்தையும் கண்முன் காட்டுகிறது விக்ரமின் கெட்அப். இளம் மற்றும்  வயதானவர் என இரண்டு தோற்றத்தில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்கலான் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் காரணமாக வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், இன்று படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி லைக்ஸ்களை அள்ளி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள, மினிக்கி மினிக்கி என்ற இந்த பாடலை உமாதேவி எழுதி,  சிந்து விஷால் பாடியுள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.