பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிரகாஷ்…

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறால் அவதிப்பட்டு வந்த அவர், மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவையொட்டி இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், பாதலின் மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா முழுவதும் பிரகாஷ் சிங் பாதல் மதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள குடியரசு தலைவர், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாதலின் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசியலில் பிரகாஷ் சிங் பாதல் ஒரு மிகப்பெரிய ஆளுமை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவரிடமிருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.