தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்து மூன்று மணி நேரத்திற்கு, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள் : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்
அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில், அடுத்து மூன்று மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.