முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்; குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அடல்பிகாரி வாஜ்பாய் 

1924ல் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், பள்ளிக்கல்வியை குவாலியரில் முடித்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

1951ல் ஜன சங்கத்தில் சேர்ந்த வாஜ்பாய் ஷியாம் பிரகாஷ் முகர்ஜியின் தொண்டரானார். 1968ம் ஆண்டு ஜனசங்கத்தின் தேசிய தலைவரானார். 1957 முதல் 50 வரும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவர், மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்கள் அவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜன சங்கம் பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. இதனை அத்வானி, முரளி மனோகர் ஜோஷியுடன் வாஜ்பாய் இணைந்த தொடங்கி அதன் தலைவராக அக்கட்சியை வழிநடத்தினார். 1996ல் பாஜக ஆட்சி அமைத்த போது 16 நாட்கள் பிரதமராக இருந்தார். பின்னர் பெரும்பான்மை கிடைக்காததால் ராஜினிமா செய்தார். தொடர்ந்து 1998 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற பின் மீண்டும் பிரதமரானார்.

1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனையை வெற்றிக்கரமாக நடத்தி உலக வல்லரசு நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 2018ம் ஆண்டு தனது 93வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.