சீனாவில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா?

சீன நகரம் ஒன்றில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்க கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ்…

சீன நகரம் ஒன்றில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்க கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீனாவில் ஒரு நாளில் 49 லட்சம் முதல் 53 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாதிப்பானது இன்று 10 சதவீதம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகனை தளர்த்த வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைப்பெற்றது. அந்த போராட்டத்தின் விளைவாக கொரோன கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மீண்டும் அங்கு கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறுகையில், சீனாவில் அடுத்த ஆண்டில் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இதேபோல் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் நகரம் ஒன்றில் ஒரு நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செய்தி மறுநாளே அந்நாட்டு ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.