முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இன்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் உயர்வுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விழைகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.







