கேரள தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தலைமை செயலக அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் இது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை முடிவில் வெடிகுண்டு தொடர்பான பொருட்கள் எதுவும் கிடைக்காததால் அந்த மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சலின் விவரங்களின் மூலம் அந்த மர்ம நபரை பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு நிதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.







