முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

திடீர் மாரடைப்பு: இன்சமாம் உல் ஹக்கிற்கு தீவிர சிகிச்சை

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது. லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை. மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட் டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் நலம்பெற கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

51 வயதான இன்சமாம் உல் ஹக், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ் தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11701 ரன்களை எடுத்துள்ளார். 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8829 ரன்கள் குவித் துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பாகிஸ் தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.850-க்கு விற்பனை

புதிய வகை கொரோனா பரவல்; பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் பயணத்தடைகளை விதித்த உலக நாடுகள்!

Saravana

85 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!

Saravana Kumar