முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் – மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் தற்போதைய முதலமைச்சரும்  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்திய அவர் அதனைத்  தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலரை வெளியிட்டார். மேலும் அங்கு   அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து கலைஞர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி திரையரங்கில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு குறும்படத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.