கொடைக்கானல் சென்ற வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்!

ழனியில் இருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களில் கொண்டு  செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து 64 கிலோமீட்டர் தெலைவில், மேற்குத்தொடர்ச்சி மலையில் கொடைக்கானல்‌ உள்ளது. கொடைக்கானலுக்கு செல்ல…

ழனியில் இருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களில் கொண்டு  செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து 64 கிலோமீட்டர் தெலைவில்,
மேற்குத்தொடர்ச்சி மலையில் கொடைக்கானல்‌ உள்ளது. கொடைக்கானலுக்கு
செல்ல பிரதான வழியாக பழனியில் இருந்து செல்லும் சாலை அமைந்துள்ளது.
பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கூல்டிங்க்ஸ்
பாட்டில்களை வனப்பகுதியில் வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது‌. இந்த
பிளாஸ்டிக் பாட்டில்களால் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் கடுமையாக
பாதிக்கப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு
செல்வதும், மலைப்பகுதிகளில் வீசுவதும் வனத்துறையால் தடைசெய்யப்பட்டது.

தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், கோடை வெயிலில் இருந்து
தப்பிக்க தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு ஏராளமான
சுற்றுலா பயணிகள் வருகின்றனர்‌. இதனால், பழனி-கொடைக்கானல் சாலையில்
சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் செல்லத் துவங்கியுள்ளது. இதனால், கொடைக்கானல்
தேக்கந்தோட்டம் பகுதியில் வனத்துறை சார்பில், சோதனைச்சாவடியில் சுற்றுலா
வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

மேலும், தவிர்க்கமுடியாத நிலையில் வாட்டர் பாட்டில்களை கொண்டு செல்லவேண்டிய
சூழல் இருந்தால், சுற்றுச்சூழலை கெடுக்கும் பிளாள்டிக் பாட்டில்களை மலைப்பாதையில்
வீசி எறியக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி அனுப்புகின்றனர். பறிமுதல்
செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும்,
வனத்துறையினரின் செயல்பாட்டை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வரவேற்கின்றனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.