நெல்லை மாவட்டம் , வடக்கன்குளத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து
ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் அந்தோணி பெலிக்ஸ். இவர் வடக்கன்குளம் மெயின் ரோட்டில், செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் இரவு கடையடைத்துவிட்டு, மீண்டும் இன்று காலையில் கடையை திறக்க வந்தவர், கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து , பணகுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், போலீசார் விசாரணையில் செல்போன் கடையில் இருந்து 5 செல்போன்கள் , ப்ளூடூத், ஹெட் போன் மற்றும் பவர் பேங்க் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு.பாலமுருகன்