பெண் ஆளுமை ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரது நினைவைப் போற்றுகிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை…துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை…
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.#JayalalithaBirthday pic.twitter.com/nJAqxNyveG— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 24, 2023
-ம.பவித்ரா