முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களையில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இதுகுறித்து பேசிய அவர், வரும் ஆண்டில் (2023) பிரவாசி பாரதிய திவாஸ் ஜனவரி 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட உள்ளது. இதில் கயானா அதிகார் இர்பான் அலி சிறப்பு விருந்திரனராக கலந்து கொள்கிறார். அதேபோல் குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் அப்தேல் படா எல் சிசி கலந்து கொள்ள உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீண்டகால நட்பு

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றார். கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில், இந்திய பிரதிநிதியாக துணை ஜனாதிபதி பங்கேற்றார். கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடரின் துவக்க விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கலந்து கொண்டார். 8.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் அந்நாட்டுடனான இந்தியாவின் நீண்ட கால நட்பை எடுத்து காட்டுகிறது. ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதிச்சடங்கில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஜப்பானின் நட்பு நாடு இந்தியா என்ற முறையில் மோடி பங்கேற்றார்.

தலைமைத்துவம்

ஜி20 மாநாட்டிற்கு இந்திய தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதில், 200 கூட்டங்களை இந்தியாவில் பல இடங்களில் நடத்த ஏற்பாடு செய்வதே எங்களின் முற்சியாக உள்ளது. இது இந்தியாவால் நடத்தப்படும் மிக உயர்ந்த சர்வதேச கூட்டமாகும். வெளியுறவு கொள்கை என்பது அமைச்சகத்தின் செயல்பாடு அல்லது அரசின் சாதாரண செயல்பாடு அல்ல. இது அனைத்து இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவாலான சூழ்நிலையில் இந்திய மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை.

சிறந்த ஒப்பந்தங்கள்

இந்திய மக்களின் நலனுக்காக சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடத்திற்கு செல்வது விவேகமான கொள்கை. அதன்படி தான் ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு

இந்திய எல்லை பகுதியில் ஆக்கிரமிக்க நினைக்கும் சீனாவிடம் தூதரக ரீதியில் தெளிவாக கூறிவிட்டோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து எல்லைப் பகுதியில் குவித்தால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இல்லை என்று அர்த்தம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஜனநாயகத்தில் புதிய சர்வாதிகாரம் வாரிசு அரசியல்”

Arivazhagan Chinnasamy

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 டிஎஸ்பி-களுக்கு பணி நியமனம்

Web Editor

ஜனநாயக கடமையாற்றும் குடிமக்களுக்கு நன்றி; பிரதமர் மோடி

G SaravanaKumar