ஆண் பெண் சமம் என்ற நோக்கத்தினாலே கட்டா குஸ்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் -விஷ்ணு விஷால்

ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் பிடித்த காரணத்தால்தான் கட்டா குஸ்தி படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக்கொண்டேன் என விஷ்ணு விஷால் பேசியுள்ளார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி…

ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் பிடித்த காரணத்தால்தான் கட்டா குஸ்தி படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக்கொண்டேன் என விஷ்ணு விஷால் பேசியுள்ளார்.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, இயக்குநர் செல்லா அய்யாவு மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது விழா மேடையில் விஷ்ணு விஷால் பேசியபோது, கட்டா குஸ்தி படத்தின் முதல் நாள் வசூலை விட 2-வது நாள், 3-வது நாள் என தற்போது வரை 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வருகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் எனக்கு பிடித்த காரணத்தால்தான் இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.

 

மேலும், நான் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு என் அம்மாவும், அக்காவும் எனக்கு ஆதரவளித்ததில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. எல்லாருடைய ஆண்களின் வாழ்விலும் கண்டிப்பாக ஒரு பெண்ணின் ஆதரவு எப்போதும் இருக்கும். அவ்வாறான ஒரு கதைக்களம் கொண்ட படத்தை தயாரிக்க ஆசைப்பட்டதின் விளைவுதான் கட்டா குஸ்தி திரைப்படம் ஆகும் என பேசினார்.

அத்துடன், எந்த எண்ணத்தில் இந்த படத்தை உருவாக்கினோமோ, அதே எண்ணத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்ந்து உள்ளது. அது வழியாக ஒரு மாற்றம் நடந்தால் சந்தோஷம் தானே. இந்த வருடத்தில் எஃப்.ஐ.ஆர். படத்தை தொடர்ந்து எனக்கு இது 2-வது வெற்றி, மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது . உண்மையாலுமே எனக்கு ஒன்பது படம் டிராப் ஆனது. ஆனால் தற்போது என் கைவசம் 9 திரைப்படங்கள் உள்ளன என கூறினார்.

இன்னும் நிறைய திரைப்படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என விஷ்ணு விஷால் பேசினார் மேலும் இயக்குநர் செல்லா அய்யாவு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பட குழுவினர் அனைவரும் விழா மேடையில் நன்றி என கூரினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.