முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய இனி தமிழ்நாடு அரசுக்கு உலகளாவிய டெண்டர் தேவைப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 500 படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்காக, இந்த வளாகத்தில் உள்ள நான்கு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் 70 ஒப்பந்த மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு வழங்கினர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது,

70 மருத்துவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறிய அவர், அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள் காலியில்லா நிலையில் இயங்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் நிலையை, அவர்கள் உறவினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தனியார் மருத்துவமனைகளும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், இதுவரை 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement:

Related posts

பூரண மதுவிலக்கு : பாமக தேர்தல் அறிக்கை

Niruban Chakkaaravarthi

வன்முறையில் குதித்த மருத்துவர்: வீடியோ வைரல்!

Hamsa

6 நிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு!

Ezhilarasan