அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து – எலன் மஸ்க்

அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து செய்யப்படுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்படும் டெஸ்லா நிறுவன மின்சார…

அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து செய்யப்படுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்படும் டெஸ்லா நிறுவன மின்சார கார்கள் உலகின் பிரபலமாக உள்ளன. பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிறுவனம் அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த S Plaid+ மாடல் காரை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்தது. முழுமையாக சார்ஜ் செய்தால் 643 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதனால், உலக அளவில், இந்த கார் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக, காரின் அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, S Plaid+ மாடல் கார் உற்பத்தி செய்யும் திட்டம் கைவிடப்படுவதாக, டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்படும் கார்கள் சிறப்பாக இயங்குவதால், அதை மேம்படுத்தும் முடிவை கைவிடுவதாக எலன் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.