மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல கால்பந்து வீரர் பீலே உடல்நலம் பெற வேண்டி கத்தாரில் உயர்கோபுரத்தில் மரியாதை செய்யப்பட்டது.
பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளுக்கு, அவரது உடல்நிலை ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருவதை அடுத்து, பல அணிகளின் முன்னனி வீரர்களும், ரசிகர்களும் அவர் நலம் பெற்று திரும்ப பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள கலீபா மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ளா உயர் கோபுரத்தில் கெட் வெல் சூன் பீலே என்று திரையிடப்பட்டது.
பீலே உடல்நலம் தேற வேண்டும் என்பதற்காக இவ்வாறு திரையிடப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்திய நிலையில், பீலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ராசிகர்கள் மற்றும் கத்தார் அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நான் மாதம் தோறும் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருக்கிறேன். இதுபோன்ற நேர்மறையான செய்திகளைப் பெறுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சீக்கிரமாக குணமடைய வேண்டும் என்று எண்ணிய கத்தார் அரசுக்கு நன்றி, என்று கூறியுள்ளார்.