நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தின் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியானது. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.’வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.
சமீபத்தில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் பார்வயைர்களை கடந்த புது சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் 2வது பாடல் வருகிற டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 2-வது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.