தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,750- ரூபாயை கொடுக்க தடுமாறி கொண்டு இருந்தனர். ஆனால் திமுக அரசு வந்தவுடன் 150 ரூபாய் சேர்த்து 2,950 ரூபாய் அளவுக்கு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆட்சியில் கொடுக்காமல் இருந்த கரும்புக்கான நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியின் படி நெல்லுக்கு கூடுதலாக குவிண்டாலுக்கு 50- ரூபாய் வழங்கபட்டுள்ளது என கூறினார்.
கொள்முதல் செய்யப்படும் நெல்லை பொது வெளியில் கொட்டி வைக்காமல் வேளாண் மையங்களில் பாதுகாப்பாக வைக்கபட்டு உடனுக்குடன் அரை செய்ய போதிய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்றார். மேலும் தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக கூறினார். மேட்டூர் அணை முன்கூட்டியே அதாவது ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே தண்ணீரை திறந்து இந்த ஆண்டு 25- ஏக்கர் கடந்த ஆண்டை விடு கூடுதலாக நடவு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்