வெளிநாட்டவர்கள் பலரும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
உணவுத் திருவிழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக இள வட்டக்கல் தூக்குதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் இளவட்டக்கல்லை தூக்கி பரிசுகளை வென்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற, டயர் இழுவைப் போட்டியில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் சுற்றில் பங்கேற்ற பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை வென்றவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
வளையம் எறியும் போட்டியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.இதில் சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் கலந்துகொண்ட பரிசுகளை வென்றனர்.

இதனிடையே, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று ஊரும் உணவும் திருவிழாவில் திருக்குறள் போட்டியில் 5 குறள்களை கூறிய LKG மாணவர் தனுஷ் சான்றிதழ் வழங்கப்பட்டது.







