முக்கியச் செய்திகள்

மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா

தமிழ்நாட்டின் பிரத்யேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா, மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழகத்தின் பிரத்யேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவு தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக உள்ள உணவு வகைகள், இனிப்பு வகைகள் என 25 க்கும் மேற்பட்ட பிரத்யேகமான உணவுகளை, உணவுக்குப் பெயர்பெற்ற மதுரையில் சங்கமிக்க வைத்துள்ளது நியூஸ் 7 தமிழ்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“ஊரும் உணவும் – இது உங்க ஊர் திருவிழா” என்ற பெயரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 6 மற்றும் 7) உணவுத் திருவிழா நடைபெறுகிறது. கட்டணம் எதுவுமில்லாமல் இலவசமாக உணவுத் திருவிழாவில் பங்கேற்கலாம். பங்கேற்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்பவர்களுக்கு மணிக்கொரு முறை பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படுகிறது.

உணவுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் சவால்களும் களைகட்டுகின்றன. திறமைகளை வெளிப்படுத்துபவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவடைகிறது.

உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகள்:

தூத்துக்குடி மக்ரூன், கிருஷ்ணகிரி நைஸ் பால்கோவா, காரமடை தேர் மிட்டாய், சீர்காழி பருத்தி பால் அல்வா, தூத்துக்குடி கருப்பட்டி இனிப்புகள், காரைக்கால் அல்வா மற்றும் ஜாமூன், தஞ்சாவூர் அசோகா அல்வா, திண்டிவணம் முட்டை மிட்டாய், சேலம் மற்றும் கரூர் தட்டு வடக்கடை, அலங்காநல்லூர் பால் பன், திருச்சி அக்கார வடிசல், சேலம் மூலிகை தந்தூரி டீ, ஊத்துக்குளி வெண்ணெய், ஹனி பீடா, அம்பாசமுத்திரம் அரிசி அப்பளம், ஊட்டி வறுக்கி, மார்த்தாண்டம் தேன், உடுமலை பருப்பு சாதம், ஹோகேனக்கல் மீன் சாப்பாடு, ஆம்பூர் பிரியாணி, பள்ளிபாளையம் சிக்கன், கருப்பு கவுனி ஐஸ்கிரீம், மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் சந்திரகலா, 25 வகை சர்பத், நெல்லை இடியாப்பம் சொதி, திருப்பத்தூர் மக்கன்பேடா, திண்டுக்கல் வாழை இலை பரோட்டா, கீழக்கரை துதல் தொல் அல்வா, ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ், திண்டுக்கல் சீரகசம்பா பிரியாணி, மதுரை முயல் கறி, பள்ளிபாளையம் சிக்கன், நாமக்கல் முட்டை, ஊத்துக்குளி வெண்ணெய், பன்ருட்டி முந்திரி, பாண்டிச்சேரி கமரக்கட்டு, சேலம் ஜவ்வரிசி இனிப்புகள், நாகை பனங்கிழங்கு கேக், கரூர் கரம்ஸ், மாஞ்சோலை டீ உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசு துணை தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் அமரீந்தர் சிங்?

Web Editor

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு!

Halley Karthik

இனி இது மதிமுக 2.0; துரை வைகோ

G SaravanaKumar