தமிழ்நாட்டின் பிரத்யேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா, மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழகத்தின் பிரத்தியேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக உள்ள உணவு வகைகள், இனிப்பு வகைகள் என 25 க்கும் மேற்பட்ட பிரத்யேகமான உணவுகளை, உணவுக்கு பெயர் போன மதுரையில் சங்கமிக்க வைத்துள்ளது நியூஸ் 7 தமிழ்.
“ஊரும் உணவும் – இது உங்க ஊர் திருவிழா” என்ற பெயரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி ) ஆகிய நாட்களில் உணவு திருவிழா நடைபெறுகிறது.
கட்டணம் எதுவுமில்லாமல் இலவசமாக உணவு திருவிழாவில் பங்கேற்கலாம். பங்கேற்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்பவர்களுக்கு மணிக்கொரு முறை பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படுகிறது.
உணவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், சவால்களும் களைகட்டுகின்றன. திறமைகளை வெளிப்படுத்துபவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. ஊரும் உணவும் திருவிழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவடைகிறது.







