புழல் ஏரியிலிருந்து 2000 கன அடி உபரி நீர் திறப்பு -கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!

தொடர் கனமழை காரணமாக புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 200 கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர் 2000 கன அடியாக திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்கண மழை காரணமாக சென்னை புழல் நீர் தேக்கத்தில்…

தொடர் கனமழை காரணமாக புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 200 கன அடியாக
திறக்கப்பட்ட உபரி நீர் 2000 கன அடியாக திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது.

தொடர்கண மழை காரணமாக சென்னை புழல் நீர் தேக்கத்தில் அதன் மொத்த கொள்ளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3074 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 21.20 அடியில்  தற்போது 21.2 அடி உயரம் நீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்ததால் பாதுகாப்புக் கருதி மதகு எண் ஒன்றில் விநாடிக்கு 200 கன அடி வீதம் உபரி நீர் நேற்று திறந்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று நவம்பர் 30 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபரி நீர் கால்வாய் வழியாக சாமியார்மடம்,  சடையங்குப்பம், எண்ணூர் வழியாக கடலில் சென்று கலக்கும். இதனால்  கரையோரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்,  கால்வாயில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் சார்பில் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.