ஆவினில் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அறிமுகம்!

ஆவினில் 200 மி.லி. ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஊதா நிற பால் பாக்கெட்டுகள் இனி 200 மி.லி. அளவில்…

ஆவினில் 200 மி.லி. ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் சார்பில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஊதா நிற பால் பாக்கெட்டுகள் இனி 200 மி.லி. அளவில் அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவனம் சார்பில் (நவ.29)  புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆவின் டிலைட் 200 மி.லி. பால் பாக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை(டிச.1) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த பால் பாக்கெட் ரூ.10-க்கு அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும்.

மேலும் டிச.1 முதல் ஆவின் 500 மி.லி. டிலைட் பால் பாக்கெட்டுகள் ரூ. 21-க்கு மாதாந்திர பாலட்டைகள் மூலம் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.