சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிஅருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்…

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிஅருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுருளி அருவி பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் நீர்வரத்து தரும் அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளிலும் நீர்பெருக்கு ஏற்பட்டது.

அதே போல் அருவிக்கு மேல்புறம் அமைந்துள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள தூவானம் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், இன்று அருவியின் நீர்வரத்தை கண்காணித்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.