வைகை அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு 3 ஆயிரத்து 569 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 69 அடியை எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஏழு மதகுகள் வழியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், உபரி நீரின் அளவு, 3 ஆயிரத்து 569 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், வைகை ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.







