ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

ஏலகிரி மலையில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து…

ஏலகிரி மலையில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பறை நீர்வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், நீர் வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு ஆற்றுக்கு செல்வதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.