திருத்தணி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அமைச்சர் மு.நாசர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், திருத்தணி அருகே நந்தி ஆற்றங்கரையோரத்தில், குடிசை அமைத்து வசித்து வந்த 20-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
https://twitter.com/Avadi_Nasar/status/1462357814286819333
இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்தியன் ஆகியோர் டிராக்டரில் சென்று அம்மக்களை நேரில் சந்தித்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினர். மேலும், அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார்.








