கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்காதவாறு கூடுதலாக 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் கொள்முதல் நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலின் விலை குறைப்பை அமல்படுத்தாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 11 விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடாக விற்பனை செய்யப்படுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
ஊரடங்கு காலமென்பதால் விவசாயிகள் தனியாருக்கு வழங்கி வந்த பாலையும் ஆவின் நிலையங்களுக்கு வழங்கி வருவதால், அவர்கள் பாதிக்காத வகையில் கூடுதலாக இரண்டு லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வருவதாகவும் கூறினார்.







