முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 43 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது விமான நிலையத்தில் உள்ள வரி இல்லா பொருட்கள் விற்பனை கடை முன் நின்றிருந்த ஏர்- இந்தியா நிறுவன ஊழியரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் தங்க பசைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ. 43 லட்சத்து 41ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்.

மேலும் அவரிடம் விசாரித்த போது துபாயில் இருந்து சென்னை வந்த இலங்கை நாட்டை சேர்ந்த பயணி ஊழியரிடம் தந்து வெளியே கொண்டு வர சொல்லி விட்டு பையை தந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் ஏர்-இந்தியா நிறுவன ஊழியரை கைது செய்து தங்கத்தை தந்து விட்டு தப்பி சென்றவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது பா.ரஞ்சிதின் ”நட்சத்திரம் நகர்கிறது” ட்ரெய்லர்

EZHILARASAN D

உதயசூரியன் வடிவில் நின்று இளைஞர்கள் சாதனை!

Niruban Chakkaaravarthi

செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பெரியகருப்பன்

Jeba Arul Robinson