முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் பக்தி செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுவதாக, தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலும் 18-ம் தேதி, அடுத்த மண்டல காலம் முதல் ஒருவருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட 18 மேல் சாந்திகளின் பெயர்களை வெள்ளி கோப்பையில் வைத்து பந்தளம் அரண்மனையில் இருந்து வரும் சிறுவரான கிருத்திகேஷ் வர்ம சபரிமலை மூலவர் கோயிலுக்குரிய மேல் சாந்தியையும் மற்றும் பௌர்ணமி வர்மா மாளிகை புரம் தேவி கோயிலுக்குரிய மேல் சாந்தியையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர்.


அதன் பின்னர் மன்னர் சித்திரை திருநாள்பிறந்த நாளை ஒட்டி 24-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து
மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி 5 மணிக்கு நடை திறக்கும் என்றும் சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கமல்ஹாசன்!

G SaravanaKumar

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

Halley Karthik

ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!

Gayathri Venkatesan