முக்கியச் செய்திகள் தமிழகம்

குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி அருகே கன்னிமாறன் ஓடையில் குளிக்க சென்ற பதினைந்து பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கன்னிமாறன் ஓடையில் குளிப்பதற்காக 11 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 15 பேர் சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தண்ணீர் குறைவாக இருந்ததால் அனைவரும் கன்னிமாறன் ஓடையைக் கடந்து மறு கரைக்கு சென்று குளித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், திடீரென ஓடையில் அதிகளவு தண்ணீர் வரத் தொடங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 14 பேர் கரையின் மறுபக்கம் சிக்கிய நிலையில், ஒருவர் மட்டும் வெள்ளத்தின் நடுவே பாறையில் சிக்கித்  தவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, வள்ளியூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப்படையினர், வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை-பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Editor

“HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை

EZHILARASAN D

சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் உத்தரவு

G SaravanaKumar