5 நாட்களுக்குப் பின், தூத்துக்குடி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ்!

5 நாட்களுக்குப் பிறகு முத்துநகர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து இன்று (டிச.22) காலை தூத்துக்குடி சென்றடைந்தது.  தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால்,  நெல்லை,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.  மக்களுன் இயல்பு வாழ்க்கை…

5 நாட்களுக்குப் பிறகு முத்துநகர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து இன்று (டிச.22) காலை தூத்துக்குடி சென்றடைந்தது. 

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால்,  நெல்லை,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.  மக்களுன் இயல்பு வாழ்க்கை வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இதில் சாலைவழி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில்,  ரயில் இருப்பு பாதைகள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் தென் மாவட்டங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தற்போது  ரயில் நிலையங்களில் மழைநீர் வடிய துவங்கியதை தொடர்ந்து ரயில் சேவைகள் மீண்டும் துவங்க ஆரம்பித்துள்ளது.  அந்த வகையில்,  தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து,  5 நாட்களுக்குப் பிறகு முத்துநகர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து இன்று (டிச.22) காலை 6;15 மணிக்கு தூத்துக்குடி சென்றடைந்தது. வந்தடைந்தது.

5 நாட்களுக்குப் பிறகு,  சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தது மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.