மீனவர்கள் விவகாரம் : இலங்கை அதிபரிடம் கலந்துரையாடியதாக தமிழில் ட்விட் செய்த பிரதமர் மோடி!

மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடியதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள்புரட்சியால் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான…

மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடியதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள்புரட்சியால் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பதவியிழந்தது. அதன் பிறகு ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசு அமைந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அதிக அளவில் உதவிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இலங்கையின் அதிபரான பிறகு ரணில் இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்தில் வரவேற்றார்.

Imageஅவர் இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான மிக நீண்ட நெடிய நட்புறவை புதுப்பிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டு பயன்பெறும் வகையிலும் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்க-வுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா-இலங்கை இடையேயான பல திட்டங்கள் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இலங்கை எல்லைப்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக ஜூலை 8-ம் தேதி கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

https://twitter.com/narendramodi/status/1682365634691358721?t=AaQL8OVHDR0ReW20cL-QSg&s=08

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனஞ்செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டுமென்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.” என தமிழில் பதிவிட்டு இலங்கை ஆளுநர் ரணில் விரமசிங்கவிற்கு டேக் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.