இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்

இளைஞரை கவ்விச் சென்ற புலியை மூங்கில் கம்பால் தாக்கி அவர் நண்பர்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24பர்கனாஸில் உள்ள கொசாபா ( Gosaba) வனப்பகுதிக்குள் செல்ல, பொதுமக்களுக்கு…

இளைஞரை கவ்விச் சென்ற புலியை மூங்கில் கம்பால் தாக்கி அவர் நண்பர்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24பர்கனாஸில் உள்ள கொசாபா ( Gosaba) வனப்பகுதிக்குள் செல்ல, பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது புலிகள் காப்பகம் ஆகும். அதையும் மீறி வனத்துறையினருக்குத் தெரியாமல் பலர் சென்றுவருவது வழக்கம். இந்நிலையில் கவுர் மிஸ்ட்ரி என்பவரும் அவர் நண்பர்களும் அந்த புலிகள் காப்பகப் பகுதிக்குள் சென்றனர்.

அங்குள்ள நீர் நிலைகளில் இருந்து நண்டுகளைப் பிடிப்பதற்காக, அவர்கள் தடையை மீறி சென்றனர். அப்போது அங்கு படுத்திருந்த புலி ஒன்று கவுர் மிஸ்ட்ரி மீது பாய்ந்து அவர் தலையை கவ்வியது. தரதரவென அப்படியே வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இதைக் கவனித்த அவர் நண்பர்கள் தாங்கள் வைத்திருந்த மூங்கில் கம்புகளால் புலியை தாக்கி னர். ஆனால், புலி அவரை இழுத்துச் செல்வதில் குறியாக இருந்தது. பின்னர் சுமார் 10 நிமிடம் போராடி, அவர்கள் புலியை விரட்டியுள்ளனர்.

புலி தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த கவுர் மிஸ்ட்ரியை அவர்கள் தூக்கிக் கொண் டு கிராமத்துக்கு திரும்பினர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், அவரை மருத்து வமனையில் சேர்த்தனர். அவருக்கு தலை, கழுத்து பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அவர் கள் சட்டவிரோதமாக சென்றுள்ளனர். இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் புலி யால் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கொரோனா காரணமாக பலருக்கு வேலை வாய்ப்பு இல்லாததால், அவர்கள் அனுமதியின்றி காட்டுக்குள் வருகிறார்கள்’ என் றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.