புதுச்சேரியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் தேர்வு ஆக.14-ல் தொடக்கம்!

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வுகள் வரும் 14ம் தேதி தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லுாரி…

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வுகள் வரும் 14ம் தேதி தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லுாரி உள்பட நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு பயிலும் 830 முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு நேற்றுமுதல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான ஹால் டிக்கெட் 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனிடையே இந்த தேர்வு நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த திடீர் ரத்து மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்வாக காரணம் என பல்கலைக்கழகம் கூறினாலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதலாமாண்டு தேர்வுகள் வரும் 14ம் தேதி தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.