முக்கியச் செய்திகள் இந்தியா

திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!

இந்தியாவின் கவுகாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு  ஆனந்த் மகேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா புது முயற்சிகளுக்கும், புதுவிதமான கண்டுபிடிப்பாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது கவுகாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தேநீர் கடை ஒன்றை தொடங்கியுள்ளதற்கு பாராட்டியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: சிங்கத்திற்கு உயிர்பயத்தை காட்டிய நீர்யானைகள்!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் முதல் திருநங்கை தேநீர் கடை கவுகாத்தி ரயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ளதாக பகிர்திருந்தார்.இதற்கு ஆனந்த் மகேந்திரா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இது ஒரு சிறிய முயற்சி. இந்த புதுவிதமான முயற்சிகள் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய ரயில்வே துறையை 8 மில்லியன் மக்கள் பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். இதில் எந்த பாரபட்சமும் பாராமல் திருநங்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழை, வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை -அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு

EZHILARASAN D

14 வகையான மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்: நாளை முதல் விநியோகம்!

EZHILARASAN D

ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்

Web Editor