இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு டப்ளினில் தொடங்குகிறது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கேப்டான பிசிசிஐ நியமித்துள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்திய-அயர்லாந்து அணிகளுக்கிடையேயான டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டியானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) டப்ளினில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு போட்டியானது தொடங்க உள்ளது. இந்த போட்டி சோனி லைவ் தொலைக்காட்யில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
அண்மையில் நடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனா ஹர்திக் பாண்டியா விளையாடி அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். தற்போது முதல் முறையாக ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு தலைமையேற்றுள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் இந்த போட்டியை காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த போட்டியின் துணை கேட்பனாக புவனேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணியில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் அல்லது தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் அல்லது உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அயர்லாந்து அணியில், பால் ஸ்டிர்லிங், ஆன்டி பால்பிர்னி (கேப்டன்), காரெத் டெலானி, ஹாரி டெக்டர், லார்கான் டக்கர், கர்டிஸ் கேம்பெர், ஆன்டி மெக்பிரைன், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், கிரேக் யங், ஜோஷ் லிட்டில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.








