மத்திய அமைச்சருக்கு, தமிழ்நாடு அமைச்சர் வைத்த 5 முக்கிய கோரிக்கை

மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்குத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடற்பயிற்சி…

மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்குத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தைக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரும் அந்த சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டார். இதில், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 50 பேரும், கிண்டி சேர்ந்த பொறியியல் கல்வி மாணவர்கள் 50 பேரும் கலந்து கொண்டனர்.

மேலும் சைக்கிள் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு வாசகங்களை முதுகில் ஏந்தி, சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டனர். இந்த சைக்கிள் பயணம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கி, கடற்கரைச் சாலை வழியாக சாமி சிவானந்தா சாலை வழியாக அண்ணா சாலை சென்று, மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு விருந்தினர் மாளிகையை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில், 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி உள்ளது, சென்னையில் 4 மருத்துவக் கல்லூரி உள்ளது. மீதம் உள்ள 6 மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி புதிதாக அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, மதுரை AIMS கல்லூரி அமைக்கும் பணியை விரைவாகத் தொடங்க வேண்டும், கோவையில் புதிதாக AIMS கல்லூரி அமைக்க வேண்டும், உக்ரைனிலிருந்து வந்த தமிழ்நாடு மாணவர்களின் படிப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் படிப்பைத் தொடர வேறு இடத்தில் எற்பாடு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வைத்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘’ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்’ – முதலமைச்சருக்கு பாமக தலைவர் கடிதம்’

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக மருத்து கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாகவும், தமிழ்நாட்டில் உள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் இன்னுயிர் காக்கும் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், இந்திய அளவில் இந்த இரண்டு திட்டத்தையும் கொண்டு செல்ல இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.