முக்கியச் செய்திகள் வணிகம்

முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5% அதிகரிப்பு

நிகழாண்டின் (2022-23) முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2021-22 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இது 20.1 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டில் இரட்டை இலக்கத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் இருந்து இந்த முறை 4.1 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதும் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் கொரோனாவின் தாக்கமும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது.
2020 நிதியாண்டின் முதலாவது காலாண்டுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் நடப்பு காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேளாண், வனம், மீன்வளம் ஆகிய துறைகளில் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.2 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இருந்தது.

இதையும் படியுங்கள்: ரயில்வே எழுத்தருக்கு இருக்கையை தந்து கவுரவித்த மேலாளர்

நடப்பு நிதியாண்டில் 4.5 சதவீதமாக இருக்கிறது. நிலக்கரி, குவாரி ஆகியவற்றில் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 18 சதவீத பொருளாதார வளர்ச்சியும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இருந்தது.

16.2 சதவீத வளர்ச்சி முதலாவது காலாண்டில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளனர் – டிஜிபி

Arivazhagan Chinnasamy

கவுன்சிலர்களுக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டும்: மேயரிடம் கோரிக்கை

EZHILARASAN D

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

Gayathri Venkatesan