முக்கியச் செய்திகள் சினிமா

எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

ஆர்யா, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

எஸ்.வினோத் குமார் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனிமி’. பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவான ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். அதனால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தில், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியானது. இதை ஆர்யா, விஷால் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

Advertisement:
SHARE

Related posts

முதல்வர் பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை : மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

தமிழ்நாட்டில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று

Saravana Kumar

”எல்லையில் சீனா படைகளை குறைத்தால், இந்தியாவும் குறைக்கும்”- ராஜ்நாத் சிங்!

Jayapriya