முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி நிறுவனத்தின் புதிய யுக்தி?

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை 2 மில்லியனாக உயர்த்த பாரத் பயோடெக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.40 கோடியை கடந்திருக்கக்கூடிய நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியானது தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 2,000,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,038 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பானது 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,24,29,564 குணமடைந்துள்ளனர். தற்போது 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன.

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவை மேலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் எண்ணிக்கையை வரும் ஜூலை மாதத்திலிருந்து 2 மில்லியனாக அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மாதத்திற்கு 5 மில்லியன் தடுப்பூசிகளை நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த எண்ணிக்கை உயர்வுக்காக இந்நிறுவனம் ரூ.150 கோடியை நிதியாக கோரியுள்ளது.

பெங்களூரூவில் உள்ள தொழிற்சாலையில் இந்த மொத்த உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோடெக் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்புதலையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த முயற்சிக்கு கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் வரவேற்பளித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,73,123 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

இந்தியன் 2 தாமதம்: இயக்குநர் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

Karthick

தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இருப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை

Ezhilarasan

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்

Jeba