பிரதமர் மோடி தலைமையில் தலைமைச் செயலாளர்களுக்கான முதலாவது தேசிய மாநாடு இன்று தொடங்குகிறது.
இமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடக்குகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் இம்மாநாட்டை பிரதமர் மோடி தலைமையேற்று தொடங்கி வைக்கிறார். மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கும் விதமாக இம்மாநாடு நடைபெறுகிறது.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர் மாற்றம் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை உணவுப்பொருட்களில் தன்னிறைவை அடைதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளி மற்றும் உயர்கல்வி நிலையங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும், வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.








