நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள்…

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.

2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவுபெற்றது. அதனைத்தொடர்ந்து, திருத்திய மதிப்பெண்களைப் பட்டியலிட்டு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதாகவும், பொதுத்தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்குத் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பள்ளிகள் வாயிலாகப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.