தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதமும், டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து, சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரண் இயக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்கள் : பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!!
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேப்டன் மில்லர்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.
https://twitter.com/SathyaJyothi/status/1656245243870846976
இன்றுடன் நடிகர் தனுஷ் திரைத்துறையில் கால்பதித்து 21 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, அவர் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதமும், டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







