தேனி மாவட்டத்தில் தொடங்கிய முதல் அரசு மாதிரிப்பள்ளி!

தேனி மாவட்டத்தின் முதல் அரசு மாதிரிப்பள்ளி ஆண்டிபட்டி அருகே தொடங்கியது.  இவ்விழாவிற்கு தேனிமாவட்ட  ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. தேனி, ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லுாரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முதல்…

தேனி மாவட்டத்தின் முதல் அரசு மாதிரிப்பள்ளி ஆண்டிபட்டி அருகே தொடங்கியது.  இவ்விழாவிற்கு தேனிமாவட்ட  ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
தேனி, ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லுாரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முதல் அரசு மாதிரிப்பள்ளி மற்றும்
உண்டு உறைவிடப்பள்ளி துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனிமாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமை தாங்கினார்.  மேலும் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலை வகித்தார்.  விழாவின் முதல் நிகழ்ச்சியாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
இப்பள்ளியில் அம்மாவட்டத்தில் உள்ள 53 அரசு பள்ளிகளிலிருந்து 160 மாணவ, மாணவிகள் பத்தாம்வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து 11-ம் வகுப்பு படிக்க  சேர்க்கப்பட்டனர்.  அதில் முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மாணவர்களுக்கு உயிரி கணினி அறிவியல், கணிதம் கணினி அறிவியல் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளில் தமிழ், ஆங்கில மொழியில் முதல் நாள் வகுப்புகள் தொடங்கியது.
இதைபோல் அடுத்த ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை உண்டு உறைவிட பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.  இதுவே இம்மாவட்டத்தின் முதல் அரசு மாதிரிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.