“இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள்” – மாணிக்கம் தாகூர் ஆசிரியர் தின வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் ஒரு ஆசிரியராக இருந்து துணை குடியரசுத் தலைவராகவும், பிறகு குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் தான் சிறந்த குடிமக்களை வகுப்பறையில் உருவாக்குகிறார்கள். பல மாணவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் பயின்ற காரணத்தால் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகளைப் படைத்துள்ளனர். அதற்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அந்த வகையில் ஆசிரியர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது மிகவும் பொறுத்தமானதாகும்.

எனவே, இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.