சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால்  உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.